சுரேஷ் ரெய்னாவிற்கு ஆண் குழந்தை ; செம்ம ட்வீட் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரெய்னாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் முடிந்தது. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிரேசியா என பெயரிட்டனர்.

இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா – பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, “ஆச்சரியம், நம்பிக்கை, சாத்தியங்கள் மற்றும் சிறந்த உலகம் இவை அனைத்தும் தொடங்கிவிட்டன. எங்களின் மகனையும், கிரேசியாவின் தம்பியான ரியோ ரெய்னாவையும் வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவன் எல்லைகளை கடந்து அனைவரது வாழ்விலும் அமைதி, புதுமைகளையும், வளங்களையும் கொண்டுவர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....