செயல்முறையில் சுரேஷ் ரெய்னாவும் இருப்பார் – ஆர். ஸ்ரீதர்

கிரிக்கெட்டில் உடற்தகுதிக்கும் பீல்டிங்கும் தொடர்பு உள்ளது என அனைவருக்குமே தெரியும், ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் அதை முன்னோக்கி நேற்று (நவம்பர் 17) அன்று பேசினார்.

“இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவை விலக்கியதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரே ஒரு முறை அவர் அந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், இனி வரும் செயல்முறைகளில் சுரேஷ் ரெய்னாவும் ஒரு பகுதியாக இருப்பார்,” என பத்திரிகையாளர்களிடம் கூறினார் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர்.

இந்திய அணியின் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த பல உடற்தகுதி தேர்வுகளை வைத்து கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம், இதனால் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் போன்ற சிறப்பான பீல்டர்களும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஏமாற்றம் அளிக்கிறார்கள்.

“ஒரு வீரர் உடற்தகுதியாக இருந்தால், அதனின் விளைவு பீல்டிங் செய்யும் போது தெரியும். ஒரு வீரர் உடற்தகுதி இல்லாமல், தொடர்ந்து மூன்று (தொடர்ந்து) மூன்று முறை ஓடினால், பீல்டிங்கின் போது அசால்ட்டாக டைவ் அடித்து பிடிப்பார்கள். ஆனால், உடற்தகுதியுடன் இருந்தும், ஒரு மூன்று முறை, இரண்டு இரண்டு முறை ஓடினால், அவர்களால் அசால்ட்டாக டைவ் அடித்து பந்தை தடுக்க முடியாது,” என ஆர். ஸ்ரீதர் கூறினார்.

உலகிலேயே இந்திய அணியின் பீல்டிங் தான் சிறப்பாக இருக்க வேண்டும் என கடினமாக உழைக்கிறார் ஆர். ஸ்ரீதர். “இதை எல்லாம் செய்ய மந்திரம் தந்திரம் இல்லை. சூத்திரம் மிகவும் எளிது – பயிற்சி எவ்வுளவு செய்கிறோமோ, அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். பேட்டிங், பவுலிங் போன்று இல்லாமல் பீல்டிங் என்பது கட்டுப்படுத்த கூடிய திறமை. இதனால் தான் அதை கட்டுப்படுத்த கடினமாக உழைக்கிறோம்,” என ஆர். ஸ்ரீதர் மேலும் கூறினார்.

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்கு கடைசியாக அழைக்கப்பட்டது நியூலாந்திற்கு எதிரான தொடரில், ஆனால் காய்ச்சல் காரணமாக அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட இயலாமல் தொடரை விட்டு வெளியேறினார். பின்னர், இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் அழைக்கப்பட்டு 3 போட்டிகளில் 104 ரன் குவித்தார். அதன் பின், ஐ.பி.எல் தொடரிலும் வழக்கம் போல் ராஜாவாக அசத்திய ரெய்னா 14 போட்டிகளில் 442 ரன் குவித்தார்.

அதன் பிறகு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஸ்டேண்ட்-பை லிஸ்ட்டில் தேர்வானார். பின்னர் இந்த யோ-யோ தேர்வை காரணம் காட்டி அணியில் பெயர் பரீசீலிக்கப்படவில்லை.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.