ரெய்னாவை மீண்டும் வரவழைக்க.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஷென் வாட்சன்! என்ன சொன்னார் தெரியுமா? 1

சுரேஷ் ரெய்னாவை மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வரவழைக்கும் விதமாக பேசியிருக்கிறார் சென்னை அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன்.

சென்னை அணிக்கு 2008-ம் ஆண்டிலிருந்து ஆடி வரும் சுரேஷ் ரெய்னா, தொடர்ந்து பல ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மறுக்கமுடியாத வீரராகவும் மாறியிருக்கிறார். சென்னை ரசிகர்களுக்கு செல்லப்பிள்ளையாக மாறிய இவரை ரசிகர்கள் சின்ன தலை என செல்லமாக அழைப்பது வழக்கம்.

ரெய்னாவை மீண்டும் வரவழைக்க.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஷென் வாட்சன்! என்ன சொன்னார் தெரியுமா? 2

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்த ரெய்னா, 5 நாட்கள் பயிற்சியை முடித்துவிட்டு சக வீரர்களுடன் துபாய் சென்றார். அங்கு தனி அறையில் தங்க வைக்கப்பட்டு பின்னர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் ரெய்னாவுக்கு கொரோனா இல்லை என உறுதியானது. சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதற்கிடையில் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. விலகியதற்கு பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ரெய்னாவின் மாமா கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட சம்பவமே காரணம் என கூறப்படுகிறது.

ரெய்னாவை மீண்டும் வரவழைக்க.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஷென் வாட்சன்! என்ன சொன்னார் தெரியுமா? 3

இன்னொருபுறம் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசியதை பார்க்கையில், ஹோட்டலில் போதிய வசதியின்மை மற்றும் இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்த போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விலகி இருக்கிறார் என்கிற தகவல்களும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை அணிக்கு ரெய்னா எப்படிப்பட்டவர்? அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்கிற வகையில் செய்தியை அனுப்பி இருக்கிறார் சென்னை அணியின் மற்றுமொரு மூத்த வீரர் ஷேன் வாட்சன். அவர் கூறுகையில்,

சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரர். ஆரம்பத்திலிருந்தே அணியுடன் பயணிப்பவர். காலை தூங்கி எழுந்தவுடன் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக வந்த செய்தி கேட்டதும் பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன். சென்னை அணியின் நாடி துடிப்பாக இருந்தது ரெய்னா தான். அவரை ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள்.

ரெய்னாவை மீண்டும் வரவழைக்க.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஷென் வாட்சன்! என்ன சொன்னார் தெரியுமா? 4

அவர் இந்தியாவில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். என்றார்”.

மேலும் பேசிய அவர் , ரெய்னா மீண்டும் சென்னை அணியில் இணைந்தால், ரசிகர்கள் இழந்த மகிழ்ச்சியை திரும்பப் பெறுவார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *