ஸ்கைன்னு சும்மாவா சொன்னாங்க.. டி20 தரவரிசையில் புதிய ரெக்கார்ட், புதிய உச்சம்! 1

டி20 தரவரிசை பட்டியலில் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய வீரரும் நெருங்காத இடத்திற்கு முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ், சமீபத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை மக்கள் வாக்கெடுப்பின் மூலமாக பெற்றார்.

31 போட்டிகளை 2022ஆம் ஆண்டில் விளையாடிய சூரியகுமார் யாதவ், 1164 ரன்கள் அடித்திருந்தார். வேறு எந்த வீரரும் கடந்த வருடம் ஆயிரம் ரன்களை எட்டவில்லை. அதேபோல் 9 அரைசதங்கள் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். வேறு எந்த வீரரும் இரண்டு சதங்கள் அடிக்கவில்லை. அத்துடன் இவரது ஸ்ட்ரைக் ரேட் 188 ஆகும். இவ்வளவு ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆயிரம் ரன்களை கடக்கவில்லை.

ஸ்கைன்னு சும்மாவா சொன்னாங்க.. டி20 தரவரிசையில் புதிய ரெக்கார்ட், புதிய உச்சம்! 2

இப்படி கடந்த ஆண்டு எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கும் சூரியகுமார் யாதவிற்கு தனிப்பட்ட முறையில் டி20 உலகக்கோப்பை, ஆசியகோப்பை இரண்டும் சிறப்பாகவே அமைந்ததும்

ஏற்கனவே டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ், 908 புள்ளிகளில் இருந்தார். இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய வீரரும் டி20 தரவரிசையில் 900 புள்ளிகளை எட்டியதில்லை. அதிகபட்சமாக விராட்கோலி 897 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.

ஸ்கைன்னு சும்மாவா சொன்னாங்க.. டி20 தரவரிசையில் புதிய ரெக்கார்ட், புதிய உச்சம்! 3

900 புள்ளிகள் சாதனையை படைத்த சூரியகுமார், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வழக்கமான அதிரடி இல்லாமல் நிதானமாக விளையாடி வந்தாலும் இரண்டாவது டி20 போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்று தந்ததற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன் பிறகு வெளிவந்த டி20 தரவரிசை பட்டியலில் இரண்டு புள்ளிகள் அதிகரித்து 910 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

910 புள்ளிகள் என்பது இந்திய வீரர்கள் மத்தியில் அதிகபட்ச தரவரிசை புள்ளிகள் ஆகும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதுவே ஆல் டைம் அதிகபட்சமாக இருக்கிறது. இதனை முறியடிக்க சூரியகுமார் யாதவிற்கு இன்னும் 6 புள்ளிகள் தேவைப்படுகிறது. விரைவில் அதை முறியடிப்பார் என்று எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

ஸ்கைன்னு சும்மாவா சொன்னாங்க.. டி20 தரவரிசையில் புதிய ரெக்கார்ட், புதிய உச்சம்! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *