Cricket, India, West Indies, Pakistan, Aakash Chopra

இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் கண்டிப்பாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் மற்றும் கிரிக்கெட் வல்லுனருமான ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருக்கும் நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 1

இந்த இரு வீரர்களும் 2020க்கான ஐபிஎல் தொடரில் மிக அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருவீரர்களும் திகழ்ந்தனர்.

இவர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்காது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுபற்றி கூறிய ஆகாஷ் சோப்ரா இந்த இரு வீரர்களுக்கும் நிச்சயம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 2

2021 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூரியகுமார் யார் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் நிச்சயமாக இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகினர்.

இருந்தபோதும் சஞ்சு சாம்சன் தனக்குக் கொடுத்த வாய்ப்பை வீணடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடினார் மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை . மேலும் மனிஷ் பாண்டே இன்னும் இந்திய அணியில் சரியாக பொருந்தவில்லை என்று கூறினார்.

இந்த இரண்டு வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்; முன்னாள் வீரர் உறுதி !! 3

மேலும் அவர் கூறியதாவது சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் போனால் அவர்கள் வருகிற 2021 கானா ஐபிஎல் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

2020க்கான ஐபிஎல் போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ், அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *