சூர்யகுமார் யாதவ் நல்ல ப்ளேயர் தான்… ஆனா..? இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து அணியின் திட்டங்கள் குறித்து பேசிய கேன் வில்லியம்சன்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தேவையான திட்டங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்த தொடரின் குரூப் ஸ்டேஜ் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 15ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி இரு அணிகளுக்குமே அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என எதிர்பாக்கப்படும் நிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், “அரையிறுதி போட்டி நடைபெற இருக்கும் மும்பை வான்கடே மைதானம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ஆடுகளத்தில் விளையாட பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் நாங்கள் வான்கடே மைதானத்தில் இந்தியா போன்ற வலுவான அணியை எதிர்கொள்ள உள்ளோம். இந்திய அணியுடனான போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் உள்ளது. இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் வலுவான அணி தான் என்றாலும், போட்டி நடைபெறும் நாளில் எந்த சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றியும் கிடைக்கும் என்பதால் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அதிக பரீட்சயமானவர்கள் தான் என்றாலும் நாங்கள் அதை பற்றி கவலை கொள்ளாமல் எங்களது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்தார்.