சூர்யகுமார் யாதவ்
இனி நான் தான்… நான் மட்டும் தான்… யாரும் நெருங்கவே முடியாத இடத்தில் சூர்யகுமார் யாதவ்; டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச டி.20 போட்டிகள் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி நடைபெற்ற போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் முடித்து கொள்ளப்பட்டு டி.எல்.எஸ் விதிப்படி போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி.20 தொடரை வென்றது.

சூர்யகுமார் யாதவ்

இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டி.20 தொடருக்கு பிறகான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.

டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சூர்யகுமார் யாதவ் 890 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் டீவன் கான்வே 788 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சூர்யகுமார் யாதவை தவிர இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

சூர்யகுமார் யாதவ்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் ஹசரங்கா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. புவனேஷ்வர் குமார் 11வது இடத்திற்கும், அர்ஸ்தீப் சிங் 21வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசனே முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியாவை தவிர வேறு யாரும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெறவில்லை.

Leave a comment

Your email address will not be published.