வீடியோ; காலுலேயே செம்ம மாஸாக ரன் அவுட் செய்த கிரிஸ் மோரிஸ்
பிக்பேஷ் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், காலிலேயே ஒரு ரன் அவுட்டை செய்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.
சிட்னியில் நடந்த இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணி 15.5 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே அடித்தது. இரண்டாவதாக பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி சிட்னி தண்டர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் கிறிஸ் மோரிஸ், காலிலேயே ஒரு ரன் அவுட்டை செய்து அசத்தினார். கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை, டேனியல் ஹியூக்ஸ் அடிக்க, அந்த பந்து பிட்ச்சிலேயே கிடந்தது. ஆனால் அதற்கு ரன் ஓட முயன்ற ஹியூக்ஸ் பாதி பிட்ச் வரை ஓடியும் விட்டார். இதையடுத்து பந்தை நோக்கி விரைந்து ஓடிவந்த மோரிஸ், பந்தை கையில் எடுக்காமல், காலிலேயே ஸ்டம்பை நோக்கி தட்டிவிட்டார். அது கரெக்ட்டாக ஸ்டம்பில் அடிக்க, ஹியூக்ஸ் ரன் அவுட்டானார். அந்த வீடியோ இதோ..
Goodness gracious ?
Elite footwork from Chris Morris. Not ideal running from Dan Hughes and Josh Philippe… #BBL09 pic.twitter.com/k0cD7ARqh1
— KFC Big Bash League (@BBL) January 18, 2020
சில பவுலர்கள், ரன் ஓட முயலும் பேட்ஸ்மேனை பயமுறுத்துவதற்காக வேண்டுமென்றே ஓடிவந்து பந்தை காலில் தட்டுவார்கள். ஆனால் அவற்றில் 99.99% வீணாகத்தான் போகும். பவுலர்களும் விளையாட்டாகத்தான் தட்டிவிடுவார்கள். ஆனால் மோரிஸ் கரெக்ட்டாக ஸ்டம்பிலேயே அடித்தார்.