இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறியதாவது,டீ நடராஜன் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் மூன்று விதமான போட்டிகளிலும் செயல்படுவதுதான் அவரது முழு குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.
29 வயதான தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணிக்காக தேர்வாகினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது பல வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவருக்கு அணியில் இடம் கிடைத்தது, இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து வீரர்களையும் வாயடைக்கச் செய்தார்.

இவருடைய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்று பல வீரர்களும் இவரை பாராட்டினர் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தனக்கு கிடைத்த மேன் ஆப் தி சீரியஸ் பட்டத்தை ஹர்திக் பாண்டியா டி நடராஜனின் கையில் கொடுத்து அவரை பாராட்டினார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது, பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடராஜன் மிக சிறப்பாக பந்து வீசினார், இடது கை பந்து வீச்சாளரான நடராஜன் துல்லியமாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணற செய்கிறார்.

மேலும் டி நடராஜனின் முக்கிய குறிக்கோளாக அடுத்த ஏழு வருடம் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக அமைய வேண்டும் என்பதே. இதனால் இவர் தனது உடற் தகுதியை மேம்படுத்துவதில் ஈடுபடவேண்டும் என்று நடராஜனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.