10 ஓவர் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தலாம்: அப்ரிடி 1

10 ஓவர் கிரிக்கெட் தான் ஒலிம்பிக்கில் ஆட தகுதியான கிரிக்கெட்டி என அப்ரிடி கூறியுள்ளார்.10 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சேஷாத் அதிரடியாக ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

10 ஓவர் தொடர் கடந்த ஆண்டு முதல் துபாயில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.10 ஓவர் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தலாம்: அப்ரிடி 2

லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்திஸ் அணியும், பிரெண்டன் மெக்குலம் தலைமையிலான ராஜ்புத்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய சிந்திஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. வாட்சன் 42 ரன் குவித்தார். இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்குலமும், முகமது சேஷாத்தும் (ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ) களமிறங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் சேஷாத், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து வானவேடிக்கை காட்டினார். பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து அவர் வெளுத்து வாங்கினார்.
இதனால் வெறும் 16 பந்துகளில் அவர் 74 ரன்களை குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். 12 ரன்களில் அரைச் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இவரது அபார ஆட்டத்தால் ராஜ்புத்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாக பேட்டிங் செய்த சேஷாத்திடம் பிட்னஸ் குறித்து கேட்டபோது, நான் உடலைக் குறைக்க அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் உணவு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.10 ஓவர் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தலாம்: அப்ரிடி 3
இந்திய வீரர் விராத் கோலி மாதிரி தினமும் பிட்னஸ் பயிற்சி எடுக்கச் சொன்னால் என்னால் முடியாது. ஆனால், முயற்சி செய்கிறேன். விராட் போல சிக்சர் அடிப்பது பற்றி கேட்கிறார்கள். விராட் கோலியை விட எவ்வளவு தூரமாக சிக்சர் அடிக்க வேண்டுமோ, அவ்வளவு தூரமாக என்னால் அடிக்க முடியும். அதனால், அவரை போல் டயட் கடைபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *