நீ செஞ்ச இந்த சம்பவத்த மறக்கவே முடியாதுடா தம்பி... அதிரடி நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா !! 1
நீ செஞ்ச இந்த சம்பவத்த மறக்கவே முடியாதுடா தம்பி… அதிரடி நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் பேட்டிங்கில் மாஸ் காட்டிய ரிங்கு சிங்கை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டி.எல்.எஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி டப்லின் மைதானத்தில் நடைபெற்றது.

நீ செஞ்ச இந்த சம்பவத்த மறக்கவே முடியாதுடா தம்பி... அதிரடி நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா !! 2

இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டி.20 தொடரையும் வென்றது.

இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ரிங்கு சிங்கின் அதிரடி பேட்டிங்கே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவதால், ஆட்டநாயகன் விருது வென்ற ரிங்கு சிங்கை முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் தனது பங்கிற்கு ரிங்கு சிங்கின் பேட்டிங்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

நீ செஞ்ச இந்த சம்பவத்த மறக்கவே முடியாதுடா தம்பி... அதிரடி நாயகன் ரிங்கு சிங்கை பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா !! 3

ரிங்கு சிங் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இரண்டாவது டி.20 போட்டியில் ரிங்கு சிங் விளையாடிய விதம் அபாரமானது. எனது ஆட்டநாயகன் அவர் தான், இறுதியில் அவரே அதிகாரப்பூர்வமாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி. கடைசி நேரத்தில் ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்கள் குவித்து கொடுத்ததே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. டி.20 போட்டிகளில் களத்தில் நின்று விளையாடுவது குறைவான நேரமாக இருந்தாலும், அந்த நேரத்தை சரியாக பன்படுத்தி கொண்டால் அதனை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இரண்டாவது டி.20 போட்டியில் ரிங்கு சிங் விளையாடிய விதமும் எளிதில் மறந்துவிட முடியாத பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களும் இரண்டாவது டி.20 போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும், பேட்டிங் செய்த அனைவரையும் விட ரிங்கு சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் மிக அதிகம். அதே போல் சர்வதேச போட்டிகளில் தனது கிடைத்த முதல் வாய்ப்பையே ரிங்கு சிங் இது போன்று மிக சிறப்பாக பயன்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *