ஐசிசி தரப்பில் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விராட் கோலி முன்னேறி டாப்-10க்குள் வந்துள்ளார். ரோகித் சர்மாவிற்கு தரவரிசையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர் முடிவுக்கு வந்தது இதனை இந்திய அணி 2-1 என இந்திய அணி கைப்பற்றியது இந்த போட்டி முடிவுற்ற பிறகு டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியல் ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருந்தார். சமீப காலமாக அவருக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறி, 15வது இடத்திற்கு சென்றார். இந்நிலையில், நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
முதல் போட்டியில் (94 ரன்களும்) மற்றும் 3-வது போட்டியில் (70 ரன்கள்) ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார் விராட் கோலி. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 183 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இவரது சராசரி 183 ஆகும்.
இதன் காரணமாக, ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறி, மீண்டும் டாப்-10க்குள் இடம் பிடித்தார்.
அதேபோல், முதல் மற்றும் மூன்றாவது அரைசதம் அடித்த மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது போட்டியை தவிர, முதல் இரண்டு போட்டிகளில் சப்தப்பிய ரோகித் சர்மா ஒரு இடங்கள் பின் நோக்கி சென்று 9-வது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.