செம்ம கெத்து... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலிய அணி... அதிரடி நாயகனுக்கு அணியில் இடம் !! 1

அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

செப்டம்பர் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரு அணிகள் இடையேயான டி.20 போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடனான டி.20 தொடர் மற்றும் அக்டோபர் மாதம் துவங்கும் டி.20 உலகக்கோப்பை தொடர் ஆகிய இரு தொடர்களுக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

செம்ம கெத்து... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலிய அணி... அதிரடி நாயகனுக்கு அணியில் இடம் !! 2

இந்தியா மற்றும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில், இளம் அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த டி.20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்த அதே வீரர்களே இந்த தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர். மிட்செல் ஸ்வீப்சனுக்கு மட்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

செம்ம கெத்து... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலிய அணி... அதிரடி நாயகனுக்கு அணியில் இடம் !! 3

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், ஹசில்வுட்,மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். சீனியர் வீரரான டேவிட் வார்னருக்கு இந்திய அணியுடனான டி.20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, இதனால் கேமிரான் க்ரீன் இந்திய அணியுடனான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச், ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜாஸ் ஹசில்வுட், ஜோஸ் இங்லீஸ், மிட்செல் மார்ஸ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, கேமிரான் க்ரீன் (இந்திய அணியுடனான தொடரில் மட்டும்).

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *