ஜேசன் ராய்
உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலிருந்து கைவிடப்பட்ட அனுபவ வீரர் ஜேசன் ராய் கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
ஆனால் கெவின் பீட்டர்சன் போன்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான்கள், ஜேசன் ராய் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற வேண்டும் அப்பொழுதுதான் இங்கிலாந்து அணிக்கு அது பலமாக இருக்கும் என்று அறிவுரை கொடுத்து வருவதால் இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்று அவரை மீண்டும் அணியில் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.