எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அனைத்து அணிகளின் கனவாக இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை ஓரிரு வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிட்ட நிலையில், அயர்லாந்து அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை அறிவித்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் பவுல் ஸ்டெர்லிங், மார்க் அடைர், சாம்பர், ஜார்ட் டாக்ரெல் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் கிராய்க் யங், சிமி சிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் போன்ற வீரர்களும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி;
ஆண்ட்ரியூ பால்பிர்னே (கேப்டன்), பவுல் ஸ்டெர்லிங் (துணை கேப்டன்), மார்க் அடைர், கர்டிஸ் சாம்பர், கிரேத் டெனேலி, ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் தோனே, ஃபின் ஹேண்ட், ஜோஸ் லிட்டில், பாரி மெக்கர்தே, கானர் ஆல்பர்ட், சிமி சிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிராய்க் யங்.