உங்க ஆளுங்கள வச்சு நீங்க நெனச்சதை எல்லாம் சாதிச்சுகுறிங்க! இந்தியாவின் மீது கடுப்பான சோயிப் அக்தர்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று உள்ளது. இதன் காரணமாக உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களை விட மிக அதிக பொருளாதார வலிமையுடைய கிரிக்கெட் வாரியம் ஆக மாறியுள்ளது. பொருளாதார வலிமையை மட்டுமல்லாது, அதனை வைத்து மற்ற சிறிய கிரிக்கெட் வாரியங்களும் உதவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய எங்களுக்கு வருடா வருடம் ஒரு தொகையை செலுத்தி அந்த கிரிக்கெட் வாரியங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. இதனைத் தாண்டி ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போன்ற பெரும் கிரிக்கெட் வாரியங்கள் முக்கிய பதவிகளையும் பெற்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அதிகார மையமாக திகழ்ந்து வருகிறது.

Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இந்நிலையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு தேவையானவற்றை செய்து கொள்வதாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார். அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடக்க இருந்த டி20 உலக கோப்பை தொடரை தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி ஐசிசி மூலம் அதனை அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை வைத்து அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்திவிட பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. எங்கு சென்றாலும் இப்படித்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ஆட்களை வைத்து தேவையானவற்றை செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் வாரியங்களும் இதனை செய்து வருகின்றன என்றும் கூறியுள்ளார் இப்படிப் பார்த்தால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் பாதிக்கப்படும் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.