யாமிருக்க பயமேன்..? தனி ஆளாக பாகிஸ்தானின் கனவை கலைத்த பும்ராஹ்; இந்திய அணி மிரட்டல் வெற்றி !! 1
யாமிருக்க பயமேன்..? தனி ஆளாக பாகிஸ்தானின் கனவை கலைத்த பும்ராஹ்; இந்திய அணி மிரட்டல் வெற்றி

டி.20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

டி.20 உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்கவில்லை.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி நல்ல துவக்கத்தை அமைத்து கொடுக்க முயற்சித்து கொண்டிருந்த போது பும்ராஹ், பாபர் அசாமின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார்.

யாமிருக்க பயமேன்..? தனி ஆளாக பாகிஸ்தானின் கனவை கலைத்த பும்ராஹ்; இந்திய அணி மிரட்டல் வெற்றி !! 2

பாபர் அசாமோடு மட்டும் இல்லாமல், நீண்ட நேரம் தனி ஆளாக போராடிய முகமது ரிஸ்வானின் (31) விக்கெட்டையும் தேவையான நேரத்தில் கைப்பற்றி கொடுத்த பும்ராஹ், அடுத்ததாக இஃப்திகார் அஹமதின் விக்கெட்டையும் கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணியை கடும் நெருக்கடிக்குள் வைத்து கொண்டதற்கு கிடைத்த பரிசாக இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போன்று ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் பட்டேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *