கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா... 96 ரன்களில் ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி !! 1
கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா… 96 ரன்களில் ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து கிரிக்கெட் அணி வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய டி.20 உலகக்கோப்பை தொடரின் 8வது போட்டியில் இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதி வருகின்றன.

நியூயார்கில் நடைபெற்று வரும் இந்தியா – அயர்லாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது.

அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பரான டக்கர் (10) மற்றும் கர்டிஸ் (12) ஆகிய இருவரை தவிர அந்த அணியின் மற்ற முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா... 96 ரன்களில் ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி !! 2

கடைசி நேரத்தில் கேரத் 14 பந்துகளில் 26 ரன்களும், ஜோசுவா லிட்டில் 14 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதன் மூலம் போட்டியின் 16வது ஓவர் முடிவில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில்  அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *