வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் விண்டீஸ் அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்குமே உள்ளதால், இன்றைய போட்டிக்கான இரு அணிகளுமே தலா இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.
விண்டீஸ் அணியில் இருந்து சிம்மன்ஸ் மற்றும் ஹெய்டன் வால்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோஸ்டன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் வங்கதேச அணியில் இருந்து நூருல் மற்றும் நசூம் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சவுமியா சர்க்கார் மற்றும் தஸ்கின் அஹமத் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான வங்கதேச அணி;
சவுமியா சர்க்கார், முகமது நயீம் லிடன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிகுர் ரஹிம், மஹ்முதுல்லாஹ், அஃபிஃப் ஹூசைன், மெஹ்தி ஹசன், சோரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமத்.
இன்றைய போட்டிக்கான விண்டீஸ் அணி;
கிரிஸ் கெய்ல், ஈவின் லீவிஸ், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெய்ட்மர், கீரன் பொலார்டு, ஆண்ட்ரியூ ரசல், ஜேசன் ஹோல்டர், டூவைன் பிராவோ, அகெல் ஹூசைன், ரவி ராம்பால்.