டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலககக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்று இன்று துவங்குகிறது. இதில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் ஆகர், கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்கள் விளையாடவில்ல்லை. ஜாஸ் ஹசில்வுட், ஆடம் ஜாம்பா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியும் டேவிட் மில்லர், ரபாடா, மார்கர்ம் போன்ற சீனியர் வீரர்களுடனும், அன்ரிக் நோர்கியா, தப்ரைஸ் ஷம்சி போன்ற இளம் வீரர்களுடனும் களமிறங்கியுள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;
ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜாஸ் ஹசில்வுட்.
இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி;
குவிண்டன் டி காக், டெம்பா பவுமா, அய்டன் மார்க்ரம், ராசி வான் டிர் தூசன், டேவிட் மில்லர், ஹென்ரிக் க்லாசன், டூவைன் பெரிட்ரோயிஸ், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்கியா, தப்ரைஸ் ஷம்சி.