படுதோல்விக்கு இந்த ஒரு விசயம் மட்டும் தான் காரணம்.... ஆனா இது எங்களுக்கு ஆரம்பம் தான் ; ரசீத் கான் ஓபன் டாக் !! 1
படுதோல்விக்கு இந்த ஒரு விசயம் மட்டும் தான் காரணம்…. ஆனா இது எங்களுக்கு ஆரம்பம் தான் ; ரசீத் கான் ஓபன் டாக்

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி, நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கெத்தாக அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

தங்களை சிறிய அணி என யாருமே கூற முடியாத அளவிற்கு நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரில் மிக மிக சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி, அரையிறுதி சுற்றில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது.

படுதோல்விக்கு இந்த ஒரு விசயம் மட்டும் தான் காரணம்.... ஆனா இது எங்களுக்கு ஆரம்பம் தான் ; ரசீத் கான் ஓபன் டாக் !! 2

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, பேட்டிங்கில் கடுமையாக சொதப்பிய ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 56 ரன்களில் ஆல் அவுட்டும் ஆனாது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக இலகுவாக வீழ்த்திய தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய, ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரசீத் கான், ஆடுகளத்தின் தன்மையே தங்களது தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரசீத் கான் பேசுகையில், “ஒரு அணியாக இந்த தோல்வியை ஏற்று கொள்வது எங்களுக்கு மிக மிக கடினம். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும், அனால் ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு சாதகமாக இல்லாததால் எங்களால் நாங்கள் நினைத்தது போன்று விளையாட முடியவில்லை. ஆனால் டி.20 போட்டிகளின் சவாலும் இது தான், ஆடுகளம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அதற்கு ஏற்றார் போல் விளையாடியாக வேண்டும். தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது  என்பதே உண்மை. இந்த தொடரில் நாங்கள் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றதற்கு எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமான காரணம். அரையிறுதி போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும் இந்த தொடர் எங்களுக்கு மிக சிறப்பானது. நாங்கள் இந்த தொடரில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றதை பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன், அதே போன்று இந்த தொடரை எங்களுக்கான ஆரம்பமவாக நான் பார்க்கிறேன். அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிராக தான் தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த தொடர் மூலம் நாங்கள் அதிகமான விசயங்களை கற்று கொண்டோம். எங்களது அணியை பலப்படுத்த தேவையான அனைத்து விசயங்களையும் விரைவாக செய்வோம்”என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *