அசாம் கானிற்கு இடம் இல்லை... இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் !! 1
அசாம் கானிற்கு இடம் இல்லை… இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சர்வதேச டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியுடனான போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் அசாம் கான் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை. அயர்லாந்து அணியுடனான கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர். இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க உள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், உஸ்மான் கான், ஃபகர் ஜமான், ஷாதப் கான், இஃப்திகார் அஹ்மத், இமாத் வசீம், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா, முகமது அமீர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *