டி.20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி... இங்கிலாந்திற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துவங்கியது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்தநிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இரண்டு பிரிவிலும் (குரூப் 1, 2) இரண்டாவது இடத்தில் இருக்கும் அணிகளான நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி... இங்கிலாந்திற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து !! 2

இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில், ஜேசன் ராய் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஜேசன் ராய் விலகியுள்ளதால் ஜானி பாரிஸ்டோ துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணி;

மார்டின் கப்தில், டேரியல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டீவன் கான்வே (விக்கெட் கீப்பர்), கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரண்ட் பவுல்ட்.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி;

ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜானி பாரிஸ்டோ, டேவிட் மாலன், மொய்ன் அலி, இயன் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியம் லிவிங்ஸ்டோன், கிரிஸ் வோக்ஸ், கிரிஸ் ஜோர்டன், அடில் ரசீத், மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *