குவிண்டன் டி காக்கிற்கு அணியில் இடம்... இலங்கைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா !! 1

இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதுகின்றன.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

குவிண்டன் டி காக்கிற்கு அணியில் இடம்... இலங்கைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா !! 2

கடந்த போட்டியில் விளையாடாத குவிண்டன் டி காக், இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இதனால் க்லாசன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தவிர அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.

அதேவேளையில், இலங்கை அணி இன்றைய போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணி;

குசல் பெரேரா, பதும் நிஷான்கா, சாரித் அஸ்லன்கா, அவிக்ஸா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா, வானிது ஹசரங்கா, சமீகா கருணாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, மஹீஷ் தீக்‌ஷ்கன்னா, லஹிரு உடானா.

இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணி;

டெம்பா பவுமா, குவிண்டன் டி காக், ரசி வான் டெ டூசன், ஐடன் மார்க்ரம், ரீசா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டூவைன் ப்ரெட்ரியஸ், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, அன்ரிக் நோர்கியா, தப்ரைஸ் ஷம்சி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *