விராட்கோலி அடித்த பந்தை பாய்ந்து பிடித்து ஒட்டுமொத்த மைதானத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் வங்கதேச வீரர் தேஜுல் இஸ்லாம்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு சதம் அடித்த சமன் செய்தார்.
சதம் அடித்த பிறகு மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட்கோலி நிச்சயம் இரட்டை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 132 ரன்கள் இருந்தபோது எடபாத் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வங்கதேச வீரர் தைஜூல் இஸ்லாம் பந்தை தாவிப்பிடித்து கோலியை ஆட்டமிழக்கச் செய்தார். இதை கண்ட விராட்கோலி அதிர்ச்சியில் வாயடைத்து வெளியேறினார். அதேபோல் ஒட்டுமொத்த மைதானமும் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தது.
இந்தியா-வங்கதேச அணிகள் மோதி வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்கையில், முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு வங்கதேச அணி சுருந்தது.
அதன் பிறகு முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 347 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 241 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு, முதல் 4 வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிலை குலைந்தது. பின்னர் ரஹீம் மற்றும் மகமதுல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்து மீட்டனர்.
இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 152 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது வரை இந்தியா 89 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
It takes a brilliant effort to dismiss #KingKohli! ?
What an effort from Taijul Islam! ?
?? – 308/6 (80.3 overs)
? – https://t.co/U1rcWzMXgA#INDvBAN #PinkBallTest #PinkIsTheNewRed pic.twitter.com/jB5Vadm0lQ
— Hotstar USA (@Hotstarusa) November 23, 2019