சமீபமாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப் பயணத்தின் இந்திய அணிyin நெட் பவுளராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் இந்திய அணியில் பல வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு மெயின் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டு மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தினார், இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பிய நட்ராஜன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இவர் தேர்வாகவில்லை.

இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளுக்கு இவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது,
இந்நிலையில் தமிழக அணியின் தேர்வாளர் வாசுதேவன், விஜய் ஹசாரே போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் நடராஜன் தேர்வு செய்து வைத்துள்ளார்,
சமீபமாக நடந்து முடிந்த முஷ்டாக் அலி போட்டியில் தமிழக அணி பரோடா அணியை வீழ்த்தி 14 வருடங்களுக்குப் பிறகு வெற்றி கோப்பையை தட்டி தூக்கியது இந்நிலையில் நடராஜன் தமிழக அணிக்கு விளையாடினாள் அது தமிழக அணிக்கு இன்னும் பலமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்

இதுபற்றி வாசுதேவன் கூறியதாவது தமிழக அணிக்கு நடராஜனை தேர்வு செய்துள்ளோம், ஆனால் இதற்கு பிசிசிஐ ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிசிசிஐ ஒப்புதல் வழங்கினால் நாங்கள் நடராஜனை தமிழக அணியில் விளையாட வைப்போம் இல்லையென்றால் அவருக்கு பதில் மற்றுமொரு வீரரை களமிறக்கும் என்று தெரிவித்தார்