இந்தியாவ வச்சு செஞ்சுருப்பேன்... அப்ரிடி பேச்சுக்கு வலைத்து வலைத்து வச்சு செய்யும் ட்விட்டர் வாசிகள்! 1

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ஷஹித் அஃப்ரிடி அதிரடியாக கிரிக்கெட் விளையாடுவதில் வல்லவர். சில நேரங்களில் இந்தியாவோடு கிரிக்கெட் விளையாடும் போது அவரது கருத்துகள் இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே வார்த்தை போரை உருவாக்கி விடும்.

தற்போது ‘ASK AFRIDI’ என ரசிகர்கள் கேட்டகின்ற கேள்விகளுக்கு ட்விட்டர் மூலமாக பதிலளித்து வருகிறார். அவரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ‘இந்தியாவுக்கு எதிரான நான்கு உலக கோப்பை தொடருக்கான போட்டிகளில் நீங்கள் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.இந்தியாவ வச்சு செஞ்சுருப்பேன்... அப்ரிடி பேச்சுக்கு வலைத்து வலைத்து வச்சு செய்யும் ட்விட்டர் வாசிகள்! 2

‘அது இந்திய அணி செய்த அதிர்ஷ்டம்’ என அதற்கு பதில் கொடுத்திருந்தார் அஃப்ரிடி.

இந்நிலையில் அவரது பதிலை ட்ரோல் செய்யும் வகையில் இந்திய ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் வெச்சு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அவர் தவற விட்ட பீல்டிங் வாய்ப்பு மற்றும் பேட் செய்த போது அவுட்டான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

1999, 2003, 2011 மற்றும் 2015 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள அஃப்ரிடி நான்கு இன்னிங்க்ஸையும் சேர்த்து 55 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *