இந்திய தொடர் முடிந்து சொந்த ஊருக்கும், சொந்த ஊரில் இருந்து முகாமிற்கும் வருவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசினஸ் கிளாஸ் வழங்க பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது.
சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், இந்திய கிரிக்க்ர் வாரியத்தின் வசதியயைப் பயன்படுத்தி இந்திய அணியின் போக்கு வரத்திற்கு ஒரு தனியான் விமானத்தை வாங்கிக் பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தார். இதனால் வீரர்களின் வேலைப் பளுவும் , நேரமும் மிச்சமாவதுடன் வீரர்கள் உற்சாகமா காணப்படுவார்கள் எனக் கூறினார். மேலும், அமெரிகாவின் கோல்ஃப் வீரர்கள் எல்லாம் தங்களுக்கு தனியாக விமானம் வைத்துக் கொண்டு போட்டிக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மேலும், இந்திய கிரிக்கெட் வாரியன் தற்போது பணம் கொழிக்கும் வாரியமாக இருந்து வருகிறது. இந்திய வீரர்களே தங்களுக்கென தனியார் விமானம் வாங்கும் நாள் கூடிய சீக்கிரம் வரும். அதற்கான எந்த ஒரு தடையும் அவர்களுக்கு இருப்பதக தெரியவில்லை.
எனக் கூறியிருந்தார்.
இதன் காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறது. இவர்கள் தொடர் முடிந்த பின்னர் தங்களது ஊருக்குச் செல்லவும், ஒரு தொடருக்காக சொந்த ஊரில் இருந்து அணிக்கு திரும்பவும், இந்திய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வதற்கும் விமான டிக்கெட்டுக்கள் பிசிசிஐ-யால் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
தற்போது அவர்களுக்கு எக்கானமிக் கிளாஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் வசதிகள் சற்று குறைவு என்பதால் வீரர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அதனோடு மற்ற பயணிகளின் ஆட்டோகிராஃப் மற்றும் செல்பி போன்றவற்றால் சிரமதிற்குள்ளாகின்றனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி போன்ற உயரமான வீரர்கள் கால்களை வசதியாக நீட்டி செல்ல கஷ்டப்படுகின்றனர். இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐ-க்கு ஒரு வேண்டுகோள் வைத்தது. அதில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சி.கே. கண்ணா, தன்னுடைய சக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் வீரர்களின் உள்நாட்டு பயணங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.