டி20 உலககோப்பையில் இந்தியா மிகப்பெரிய தப்பு பண்றாங்க; அது மட்டும் நடந்தா, கப்புக்கு ஆப்பு - மிட்செல் ஜான்சன் ஓபன் டாக் 1

இந்திய அணி டி20 உலக கோப்பை அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்திருப்பது ரிஸ்க்கான செயலாக தெரிகிறது என்று மிட்ச்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 16ம் தேதி வங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி கடந்த செப்டம்பர் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் எதிர்பார்த்த வீரர்கள் எடுக்கப்பட்டுவிட்டனர். வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய கோப்பை நன்றாக செயல்பட்ட அர்ஷதீப் சிங் தக்கவைக்கப்பட்டார். காயம் காரணமாக வெளியில் இருந்த ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா இருவரும் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கின்றனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் இருக்கிறார். தீபக் சகர் மற்றும் முகமது சமி ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக வைக்கப்பட்டு இருக்கின்றனர். 15 பேர் கொண்ட அணியில் வெறும் 4 வேகப்பந்து வீச்சாளர்களே இருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்துவீச்சிருக்கு சாதகமான மைதானங்களில் வெறும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் இருப்பது மிகப்பெரிய ரிஸ்க் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலககோப்பையில் இந்தியா மிகப்பெரிய தப்பு பண்றாங்க; அது மட்டும் நடந்தா, கப்புக்கு ஆப்பு - மிட்செல் ஜான்சன் ஓபன் டாக் 2

“இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் என தேர்வு செய்து வைத்திருக்கிறது. இது மிகவும் ரிஸ்க்காக தெரிகிறது. போட்டியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கிற பாணியில் இந்திய அணி களமிறங்குகிறது. இது ஆஸ்திரேலியா போன்ற மைதானத்தில் சற்றும் பொருந்தாது. சில நேரங்களில் மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டியது இருக்கும்.

அணியில் இருக்கும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் விளையாட நேரிட்டால், யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்படும்பொழுது இந்திய அணிக்கு பின்னடைவாக முடிந்துவிடும். பெர்த் போன்ற மைதானங்களில் கண்டிப்பாக நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தேவைப்படும். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ரிஸ்க்காக மாறிவிடும்.”

 

“அணையில இருக்கும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் 145 கிமீ வேகத்தில் பந்துவீச வேண்டியடி20 உலககோப்பையில் இந்தியா மிகப்பெரிய தப்பு பண்றாங்க; அது மட்டும் நடந்தா, கப்புக்கு ஆப்பு - மிட்செல் ஜான்சன் ஓபன் டாக் 3 அவசியம் இல்லை. யாரேனும் ஒருவர் இந்த வேகத்தில் வீசினால் போதுமானது. மீதமுள்ளவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக கட்டுக்கோப்புடன் பந்துவீசினால் ஆஸ்திரேலிய மைதானங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம்.” என்று தனது கருத்தில் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *