குட்பை சொல்லும் நேரம்… இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, கோலி நிச்சயம் நீக்கப்படுவார்கள்; ரவி சாஸ்திரி உறுதி
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் டி20 தொடரில் இருந்து ஓய்வையை அறிவிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவு பெறும் நிலைக்கு வந்துவிட்டதால் ஐபிஎல் தொடருக்கு பின்பு நடைபெறும் போட்டி குறித்த பேச்சு தற்போதிலிருந்தே துவங்க ஆரம்பித்து விட்டது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வேண்டவே வேண்டாம்…
குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங் மற்றும் பிரப்சிம்றன் போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளதால், அவர்களை வைத்து இந்திய அணி t20 தொடருக்கான அணியை கட்டமைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இளம் வீரர்களுக்கு ஆதரவாக எப்பொழுதும் பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரி., ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள், லாங்கர் பார்மட்டில் கவனம் செலுத்துவதற்காக டி20 தொடரிலவ்ருந்து விலக வேண்டும் என செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்..
இதுகுறித்த ரவி சாஸ்திரி தெரிவித்ததாவது., “ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் தங்கள் யார் என்பதை நிரூபித்து காட்டிவிட்டனர். அவர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் என்பது நாம் அனைவருக்குமே நன்றாக தெரியும். நான் தற்பொழுது சொல்ல விரும்பியது என்னவென்றால்., நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்களின் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கு டி.20 தொடரில் வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
இதன் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை லாங்கர் ஃபார்மட்டான ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்த வேண்டும், சமகால இந்திய அணி ஜாம்பவான்களாக வலம்வரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தங்களுடைய அனுபவத்தை வைத்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும், இவர்கள் தங்களை புத்துணருடன் வைத்து லாங்கர் பார்மெட்டில் கவனம் செலுத்த வேண்டும் ”என விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியிருந்தார்.