ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வந்த நிலையில் மற்ற வீரர்களின் நலன் கருதி அந்தத் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பர் மாதத்தில் வைத்து நடத்தி முடிக்க பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது இந்திய அணிக்கு சாதகமாக தற்போது அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டைலர் விளக்கமளித்துள்ளார்

அவர்களை இன்னும் தயார் படுத்திக் கொள்ள நேரம் கிடைத்துள்ளது
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். இது அவர்களுக்கு முதல் சாதகமான ஒரு விஷயமாக அமைந்துள்ளது. மேற்கொண்டு அவர்கள் முழு உத்வேகத்துடன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அங்கே அவர்கள் நல்ல நிதானமாக நேரம் எடுத்து பயிற்சியை மேற் கொள்வார்கள்.

ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்கி வரும் இந்திய அணிக்கு இந்த சிறிய இடைவேளை தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும். எனவே எங்கள் அணியே எப்படி வீழ்த்துவது என்பது குறித்து இப்பொழுது அவர்கள் திட்டம் தீட்டி இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் தொடர்
எங்கள் நியூசிலாந்து அணியும் வருகிற ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. மறுபக்கம் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையும். இதில் வைத்து நாங்கள் எங்களுடைய அணியை சரியாக கணித்துக் கொள்வோம்.

என்ன தான் எங்களுடைய அணிக்கு சாதகமாக இது அமைந்தாலும் இந்திய அணியை வீழ்த்த நாங்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவ்வளவு எளிதாக இருந்து விடாதே என்றும் ராஸ் டைலர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஜூன் 18-ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.