ஒருநாள் போட்டிகளில் 400 மற்றும் 400க்கு மேல் அதிக முறை அடித்த அணிகள்

ஒருநாள் போட்டிகளில் 400 மற்றும் 400 ரன்னுக்கு மேல் அடித்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் தென்னாபிரிக்கா அணி இருப்பதில் இந்த வித ஆச்சரியமும் இல்லை. கடந்த 15 வருடமாக தென்னாபிரிக்கா அணியிடம் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. இதனால் தான் தென்னாபிரிக்கா அணி அதிக முறை 400 ரன்னுக்கு மேல் ஒருநாள் போட்டிகளில் அடித்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் 400 மற்றும் 400க்கு மேல் அதிக முறை அடித்த அணிகளை பார்ப்போம்:

நியூஸிலாந்து – 1

Brendon McCullum leads the players from the field after a comprehensive defeat in the first ODI. ANZ One Day International Cricket Series between New Zealand Back Caps and South Africa, Mount Maunganui, New Zealand. Tuesday 21 October 2014. Photo: Andrew Cornaga/www.Photosport.co.nz

இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே நியூஸிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 400 மற்றும் 400க்கும் அதிகமாக ஒரே முறை தான் அடித்துள்ளது. 2008ஆம் ஆண்டு அயர்லாந்து அணியுடன் விளையாடிய நியூஸிலாந்து அணி, பிரண்டன் மெக்கலத்தின் அதிரடி 166 ரன்னால், நியூஸிலாந்து அணி 402 ரன் அடித்தது. அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோரும் 402 தான்.

இலங்கை – 2

இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் 400 மற்றும் 400க்கும் அதிகமாக இரண்டு முறை அடித்துள்ளது இலங்கை அணி. 2006இல் நெதர்லாந்து அணியுடனும் 2009இல் இந்திய அணியுடன் அடித்துள்ளது இலங்கை. அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் 411/8.

ஆஸ்திரேலியா – 2

ஒரு காலத்தில் எதிராணிகளை புரட்டி போட்ட ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை 400க்கு மேல் அடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 400ரன்னை முதல் முதலாக அடித்தது ஆஸ்திரேலியா அணி தான். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு இன்னொரு முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 400க்கு மேல் அடித்தது.

இங்கிலாந்து – 2

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை 400க்கு மேல் அடித்துள்ளது. முதல் முறை 2015ஆம் ஆண்டில் நியூஸிலாந்து அணியிடமும், இரண்டாவது முறை 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தது. அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் 444/3 ஆகும்.

இந்தியா – 5

கடந்த சில வருடங்களாக தனது பேட்டிங் வரிசையை கொண்டு எதிரணியை பந்தாடி வரும் இந்த அணி இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இதுவரை இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 5 முறை 400 மற்றும் 400 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது.

தென்னாபிரிக்கா – 6

பேட்டிங் வரிசையை பலமாக வைத்திருக்கும் தென்னாபிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 6 முறை 400 மற்றும் 400 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் – 438. இரண்டு முறை தென்னாபிரிக்கா அணி 438 ரன் அடித்துள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.