கிரிக்கெட் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு... போட்டியின் நடுவிலே அலறியடித்து ஓட்டம்! கொரோனா காலத்திலும் தீவிரவாதிகள் அட்டூழியம் 1

கிரிக்கெட் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு… போட்டியின் நடுவிலே அலறியடித்து ஓட்டம்! கொரோனா காலத்திலும் தீவிரவாதிகள் அட்டூழியம்

பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கையில் திடீரென துப்பாக்கி சூடு நடந்ததால் போட்டியில் நடுவிலேயே வீரர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பாக்துன்க்வா மாகாணத்தின் கபர் எனும் பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தொடரின் இறுதி போட்டி என்பதால் அதனை காண கொரோன வைரஸ் பரவலையும் கண்டு கொள்ளாமல் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

கிரிக்கெட் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு... போட்டியின் நடுவிலே அலறியடித்து ஓட்டம்! கொரோனா காலத்திலும் தீவிரவாதிகள் அட்டூழியம் 2

மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென மைதானத்தின் அருகே உள்ள மலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடந்தது. இதனைக் கண்ட அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறி அடித்து ஓடி உள்ளனர். அப்பகுதியில் சிறிது நேரம் இடைவிடாமல் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. அதன்பிறகு போட்டியும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதுபோன்று உள்ளூர் போட்டிகளில் தீவிரவாதிகள் அவ்வபோது துப்பாக்கிச் சூடுகள் நடத்தி வருவது அதிகரித்து கொண்டே வருகிறது.

கிரிக்கெட் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு... போட்டியின் நடுவிலே அலறியடித்து ஓட்டம்! கொரோனா காலத்திலும் தீவிரவாதிகள் அட்டூழியம் 3

இதேபோல் ஒரு முறை 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்றிருந்தனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டு இலங்கை வீரர்கள் மயிரிழையில் உயிர்தப்பி இருக்கின்றனர். அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்படி ஒரு நிலையில் தான் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதன் பிறகு பாகிஸ்தான் அணியுடன் மோதும் எந்த ஒரு போட்டியும் பொதுவான மைதானத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மைதானத்தில் சமீபகாலமாக பாகிஸ்தான் மற்றும் மற்ற அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *