2010 முதல் 2019 வரை பத்தாண்டுகளில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம்.
2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதன் அடிப்படையில் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.
துவக்க வீரர்களாக இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குக் இந்த தசாப்தத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் அடுத்தவர்கள் பட்டியலில் 8818 ரன்களுடன் முதல் இடத்தில உள்ளார்.
வார்னர் சமீபத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 335 ரன்கள் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் இந்த ஆண்டின் தனிநபர் அதிகபட்ச ஸ்கொராக உள்ளது.
3வது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸ் இருக்கிறார். இவர் 10 ஆண்டுகளில் 6370 ரன்கள் அடித்து சராசரி 50க்கும் மேல் வைத்துள்ளார். 4வது இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் 7072 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 60க்கும் மேல்.
5வது இடத்தில இந்திய கேப்டன் விராட்கோலி இருக்கிறார். இவர் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7202 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். இவரது சராசரி 54.97 ஆகும்.
6வது இடத்தில் தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் உள்ளார். அடுத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, கேப்டன் பொறுப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீப்பராக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி:
அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Do you agree with our selections? ?
Check out the justification and the honourable mentions here: https://t.co/csLd9HAhae pic.twitter.com/Dcp7k4yiOY
— cricket.com.au (@cricketcomau) December 23, 2019