'என்னத ஆடுறாரு, இதுல கேப்டன் வேற' விராட்கோலி மீது சுனில் கவாஸ்கர் காட்டம்!! 1

விராட் கோலியின் ஆட்டம் படுமோசமாக இருக்கிறது என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராத் கோலி தனது இயல்பான ஆட்டத்தை விட படுமோசமாக விளையாடினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் 35 ரன்கள் மற்றும் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் என்ன மாதிரியான பந்திற்கு ஆட்டம் இழந்தாரோ, அதே போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஒரே மாதிரியான தவறை விராட்கோலி செய்து வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. விராட் கோலி போன்ற உலகத்தரம் மிக்க வீரர் இப்படி ஒரே மாதிரியான தவறை செய்வதால் மிக எளிதான பந்தில் கூட ஆட்டமிழந்து அணியை பின்னடைவிற்கு தள்ளுகிறார்.

'என்னத ஆடுறாரு, இதுல கேப்டன் வேற' விராட்கோலி மீது சுனில் கவாஸ்கர் காட்டம்!! 2

தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் இரண்டு இன்னிங்சிலும், வெளியே சென்ற பந்தை கவர் திசையில் ஷாட் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், வர்ணனை செய்து கொண்டிருக்கும் போது கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“பைத்தியக்காரத்தனமான ஆட்டம் என தெளிவாக தெரிகிறது. பந்து ஆப்ஸ்டம்ப்பில் இருந்து வெளியே செல்கிறது. இருந்தாலும் களத்தில் நிலைத்து நின்ற பிறகு, எதற்காக அப்படி ஷாட்டை ஆடவேண்டும். இதுபோன்று ஆட்டம் இழந்தது குறித்து விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. தொடர்ந்து பலமுறை இதற்காக அவர் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், சரி செய்து கொள்ளாமல் இப்படி மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதால் அவருக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் இது பாதிப்புதான்.” என்றார்.

'என்னத ஆடுறாரு, இதுல கேப்டன் வேற' விராட்கோலி மீது சுனில் கவாஸ்கர் காட்டம்!! 3

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 4-ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கேப்டன் டீன் எல்கர் நிலைத்து நின்று விளையாடி 52 ரன்களை எடுத்திருந்தார். ஐந்தாவது நாளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றிபெற முடியும் மழையின் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் நிச்சயம் இந்த போட்டியை இந்திய அணி கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *