இந்த வருடத்தின் இறுதியில் ஆஷஸ் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணி தீவிர பயிற்சி செய்து வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய விளையாட ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.
2017இல் டான் ப்ராட்மான் கிரிக்கெட் கேமை பிரபலமான கேம் உருவாக்கும் பிக் அன்ட் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. தற்போது, இங்கிலாந்து – ஆஸ்திரேலியா விளையாடும் ஆஷஸ் தொடரை கேமாக வெளியிடவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களின் முகம் மற்றும் பெயர்கள் அப்படியே அச்சடித்தபடியாக இருக்கும் கேமை பிக் அன்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இரு அணிகளின் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் இந்த கேமில் இடம் பெற்றுருக்கிறார்கள். கணினி, X-பாக்ஸ் மற்றும் PS-4 ஆகிவைகளுக்கு இந்த கேம் பொருந்தும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியதுடன் சேர்ந்து இந்த கேம் வெளியிடவுள்ளார்கள்.
சும்மா ட்ரைலரை பாருங்கள்: