டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் ! 1

டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் !

ஆஸ்திரேலிய அணிக்காக 1928ஆம் ஆண்டுமுதல் 1948ஆம் ஆண்டு வரை விளையாடிய தலை சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேன். அந்த காலகட்டத்தில் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டார். தற்போது வரை அவர் படைத்த மிகப்பெரிய சாதனை பல இருக்கின்றன. அதிகபட்சமாக டான் பிராட்மன் டெஸ்ட் போட்டிகளில் 98 சராசரி வைத்திருக்கிறார்.

டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் ! 2

50 போட்டிகளில் ஆடி இந்த அளவிற்கு எந்த ஒரு வீரரும் சராசரியை வைத்ததில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டியில் ஆடத் தொடங்கி விட்டால். அவரது ரோல்மாடல் டான் பிராட்மன் ஆகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு மாபெரும் தலைசிறந்த ஜாம்பவான் இவர்.

டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் ! 3

இந்நிலையில் அவர் முதன்முதலாக அணிந்து விளையாடிய ஆஸ்திரேலிய தொப்பி தற்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. மேலும் இந்த ஏலத்தின் மூலம் அவர் அன்று தொப்பி 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருக்கிறது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அணிந்த தொப்பி உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான நினைவுச்சின்னம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. அவரது தொப்பி 5.6 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் ! 4

அதற்கு அடுத்து தான் இந்த தொப்பி 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான இரண்டாவது நினைவுச் சின்னம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. தற்போது பிராட்மேனின் தொப்பியை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தொழிலதிபரான பீட்டா் ஃப்ரீடுமேன் ஏலத்தில் எடுத்துள்ளாா்.

பிராட்மேன் தொப்பியை ஆஸ்திரேலியா முழுவதுமாக காட்சிப் பொருளாகக் கொண்டு செல்லும் திட்டமுள்ளதாக அதை ஏலத்தில் எடுத்துள்ள பீட்டா் ஃப்ரீடுமேன் கூறினாா். தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தொப்பியானது 1928-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மூலம் சா்வதேச டெஸ்டில் பிராட்மேன் தடம் பதித்தபோது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னா் 1959-இல் பிராட்மேன் அந்தத் தொப்பியை தனது குடும்ப நண்பா் பீட்டா் டன்ஹாம் என்பவருக்கு பரிசாக வழங்கினாா்.

டான் பிராட்மேன் அணிந்த முதல் தொப்பி பல கோடி ரூபாய்க்கு ஏலம் ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *