ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகப்போகும் முக்கிய வீரர் ! இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாலி ! 1

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.  இதில் ஒருநாள்   மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாகவும் பிங்க் நிற பந்தில் நடைபெற உள்ளதால் உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகப்போகும் முக்கிய வீரர் ! இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாலி ! 2

ஒருநாள் மற்றும் டி20  போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்புவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இசாந்த் சர்மாவும் இடம்பெறவில்லை. ரோகித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 2வது  ஒருநாள் தொடரின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து பயிற்சிப் போட்டியில் மூளையதிர்ச்சி ஏற்பட்டதால் வில் புகோவ்ஸ்கியும், வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட்க்கு ஏற்பட்ட காயம் காரணமாகவும் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். தற்போது இந்தியா ஏ அணியுடன் நடைப்பெற்ற பயிற்சிப் போட்டியில்  பும்ரா அடித்த பந்து கேமரூன் கிரீன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகப்போகும் முக்கிய வீரர் ! இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாலி ! 3

இந்நிலையில் நேற்று தனது சக அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வறைக்கு சென்று உள்ளார். அப்போது அவரை பிசியோதெரபிஸ்ட் டேவிட் பீக்லி  பரிசோதித்து பார்த்தார். இதனால், இவரால் மேலும் நடைபெற்ற வலைப்பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

தற்போது இவர் முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் அங்கே வீரர்கள் காயத்தில் இருக்கும் நிலையில்  தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் காயமடைந்திருப்பது, அந்த அணிக்கு  மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகப்போகும் முக்கிய வீரர் ! இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாலி ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *