கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 1

கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் கௌதம் காம்பீர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கௌதம் காம்பீர் கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 2

வயது மற்றும் மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கௌதம் கம்பீர் வெகுவிரைவில் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.

ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணிக்கு மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்த கௌதம் காம்பீர் கடந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

காம்பீர் தலைமையிலான டெல்லி அணி கடந்த தொடரின் தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால், தொடரின் பாதியிலேயே கௌதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது காம்பிர் எடுத்த முடிவாக கூறப்பட்டது.

கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 3
Photo by: Vipin Pawar / IPL/ SPORTZPICS

கேப்டன் பதவியை காம்பீர் இழந்த பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை மேலும் கடந்த ஐபிஎல் தொடருக்கான தனது சம்பளத்தையும் கௌதம் கம்பீர் வாங்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டில் தனது நாட்களை எண்ணி கொண்டுள்ள காம்பீர், சமூக சேவைகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்.

வலதுசாரி சிந்தனை கொண்ட கௌதம் காம்பீர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாகவும் சில  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கௌதம் காம்பீரின் சராசரி ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இங்கு பார்ப்போம்

சராசரி சொத்து மதிப்பு Rs.101.2 கோடி
சராசரி ஆண்டு சம்பளம் Rs.10 கோடி
விளம்பர தூதுவராக Rs.4.9 கோடி
தனிப்பட்ட முதலீடுகள் Rs.85.3 கோடி
விலை உயர்ந்த கார்கள் – 3 Rs.1.6 கோடி

 

குறிப்பு; இது சராசரியான கணக்கு மட்டுமே

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *