ஆஸ்திரேலியா சொந்தமா ஜெயிக்கல.. ஜடேஜா தான் ஜெயிக்கவச்சது - சுனில் கவாஸ்கர் பேச்சு! 1

முதல் இன்னிங்ஸில் ஜடேஜா வீசிய நோபல் ஆஸ்திரேலியா அணிக்கு திருப்புமுனையாக அமைந்துவிட்டது, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

இந்தூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி சந்தித்து. இதனால் தொடரில் 2-1 என சென்றது.

ஆஸ்திரேலியா சொந்தமா ஜெயிக்கல.. ஜடேஜா தான் ஜெயிக்கவச்சது - சுனில் கவாஸ்கர் பேச்சு! 2

முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடினாலும், 109 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்ததாக பேட்டிங் செய்த ஆஸி., அணி கவாஜா மற்றும் லபுஜானே 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால், முதல் இன்னிங்சில் 197 ரன்கள் வரை எடுக்க முடிந்தது.

இதில் லபுஜானே ரன் எதுவும் எடுக்காமல் இருந்தபோது, ஜடேஜா அபாரமாக பந்துவீசி லபுஜானேவை போல்ட் செய்தார். துரதிஷ்டவசமாக, பந்து நோ-பால் ஆனது. இந்த தருணம் இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவை தந்தது. பின்னர் லபுஜானே 31 ரன்கள் அடித்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியா சொந்தமா ஜெயிக்கல.. ஜடேஜா தான் ஜெயிக்கவச்சது - சுனில் கவாஸ்கர் பேச்சு! 3

 

88 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்தியா 163 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் முடிவில் 75 ரன்கள் முன்னிலை பெற்றது.

76 ரன்களை சேஸ் செய்த ஆஸி., 1 விக்கெட் மட்டுமே இழந்து எளிதாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3வது டெஸ்டை வென்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்விக்கு ஜடேஜா வீசிய நோ-பால் மிகமுக்கிய காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர். அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியா சொந்தமா ஜெயிக்கல.. ஜடேஜா தான் ஜெயிக்கவச்சது - சுனில் கவாஸ்கர் பேச்சு! 4

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்வி எப்படி சாத்தியமானது என்று பார்த்தால், முதல் இன்னிங்சில் லபுஜானே மற்றும் கவாஜா அமைத்த 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிகிறது. ஜடேஜா வீசிய நோ-பால் தோல்விக்கு வித்திட்டுள்ளது. அதன்பிறகு 2 ரிவியூக்களை தவறுதலாக எடுத்ததும் அடுத்த பின்னடைவை கொடுத்திருக்கிறது. நன்றாக செயல்படும் வீரர், சில நேரம் அழுத்தம் மற்றும் ஆர்வமிகுதியில் முட்டாள்தனங்களை செய்வது இந்திய அணியை மொத்தமாக பாதித்துவிடுகிறது.” என்று கடுமையாக சாடினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *