ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் தேவ்தாத் படிக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார். இவர் தன்னுடைய மிகப்பெரிய ஆசையாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தான் என்று தெரிவித்திருக்கிறார்.
இவர் சமீபமாக நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டி மற்றும் விஜய் ஹசாரே போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் சையது முஷ்டாக் அலி போட்டியில் 6 போட்டிகளில் பங்கேற்று 238 ரன்கள் குவித்து அசத்தினார்.அதில் அதிகபட்சமாக 99 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்து அனைவரையும் ஆச்சரியப்பட மேலும் அந்த தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 134.56.

மேலும் அதனை தொடர்ந்து நடந்த விஜய் ஹசாரே போட்டியில் 7 போட்டிகளில் பங்கேற்று 137 ரன்கள் அடித்து 4 சதமும்,3 அரை சதங்களும் அடங்கும். இவரின் இந்த அதிரடி ஆட்டம் கிரிக்கெட் வல்லுனர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
20 வயதே ஆகும் இளம் வீரர் தேவ்தாத் படிக்கல் கூறியதாவது, எனது மிகப்பெரிய லட்சியமே லாங்கேஸ்ட் பார்மட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான்.மேலும் நான் அனைத்து விதமான போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என்னதான் ஐபிஎல் போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றாலும், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாண்டு எனது முன்னேற்றத்தையும் எனது திறமையை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது ஒயிட் பால் மற்றும் ரெட் பால் ஆகிய இரு போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது என்பது மிக சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால் தற்பொழுது நான் இரண்டிற்குமே தயாராகி விட்டேன்.
இதில் மிகப் பெரும் போட்டி உள்ளது ஆனால் இதை நான் ஒரு நகைச்சுவை சவாலாக எடுத்துக்கொண்டு மிக சிறப்பாக செயல்படுவேன். மேலும் போட்டி என்று ஒன்று இருந்தால் தான் அது நம்மளை நாமளே உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் மேலும் இதன் மூலம் தங்களுடைய திறமையும் வளரும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வருகிற ஐபிஎல் போட்டியில் விராட் கோலியுடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்க தேவ்தாத் படிக்கள் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.