பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது ரிஸ்வான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நான் நினைத்தது போல் கிடையாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான், பாகிஸ்தான் அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
தற்பொழுது கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரவுடன் சசக்ஸ் அணியில் விளையாடி வரும் முஹம்மது ரிஸ்வான், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் புஜாரா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
முதலில் விராட்கோலி குறித்து பேசிய முகமது ரிஸ்வான், “முதல் முதலில் நான் விராட் கோலியுடன் நேரில் சந்தித்த பொழுது அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டுள்ளேன், அவர் மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியிலும் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார் என்று அவரைப் பற்றி என்னிடம் பலர் கூறியுள்ளனர், ஆனால் அவரை நேரில் சந்தித்தவுடன் தான் அவர் அப்படி கிடையாது என்பது தெரிந்தது.அது மிகவும் அழகான தருணம்,நான் தற்பொழுது விராட் கோலியை நம்முடைய விராட் கோலி என்று கூறலாம் ஏனென்றால் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல தான் என்று ரிஸ்வான் பேசியிருந்தார்.
மேலும் பேசிய அவர், தாங்கள் மைதானத்தில் இறங்கி விட்டோமென்றால் யாரும் நட்சத்திர வீரர்கள் கிடையாது, யாரும் சகோதரர்கள் கிடையாது, ஆனால் வெளியில் நான் விராட் கோலியை சந்திப்பேன், மேலும் எங்களது அணியில் இருக்கும் சில வீரர்கள் தோனியை சந்திப்பார்கள் நாங்கள் மிகவும் அன்போடும் நட்போடும் பழகிக்கொள்வோம் அது வேறு என்று முஹம்மது ரிஸ்வான் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து புஜாரா குறித்து பேசிய முஹம்மது ரிஸ்வான், “கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுடன் நான் விளையாடுகிறேன், நாங்கள் மிகவும் அன்போடு பழகுகிறோம் நான் அவரை கேலி செய்தேன் வெளியில் அழைப்பேன், அவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார், அதேபோன்றுதான் நான் விராட் கோலியுடனும் சகஜமாக அன்பாகவும் பழகுகிறேன் என்று முஹம்மது ரிஸ்வான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.