பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்? பாகிஸ்தான் தலைவரால் இந்த நிலை - வெளியான அதிர்ச்சி தகவல்! 1

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்? ஐசிசி-இல் புதிய பொறுப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐசிசி சேர்மன் பதவிக்கு ஒருமனதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்தும் விலகலாம் என கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைவதற்கு அடுத்து, இவரது இடத்திற்கு பாகிஸ்தானை சேந்த ஈஷான் மானி போட்டியிட இருந்தார்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்? பாகிஸ்தான் தலைவரால் இந்த நிலை - வெளியான அதிர்ச்சி தகவல்! 2

மேலும், இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள கங்குலி, அண்மையில் ஐசிசி உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இவரும் சேர்மன் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று ஈஷான் மானி ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், போட்டியின்றி கங்குலி தேர்வு செய்யப்படலாம் என்கிற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தானை சேர்ந்த ஈஷான் மானி கூறுகையில், “சேர்மன் தேர்தலின் போட்டியில் இருந்து நான் விலகினேன். இதுகுறித்து வெளியான அனைத்து செய்திகளும் உண்மை. மேலும், இதுகுறித்து மீடியாவில் நானே பேசிவிட்டேன்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்? பாகிஸ்தான் தலைவரால் இந்த நிலை - வெளியான அதிர்ச்சி தகவல்! 3

என்னை போட்டியிடுமாறு இந்தியா தரப்பில் இருந்தும் கேட்டுக் கொண்டனர். ஆனால், எனக்கு ஆர்வம் இல்லை என கூறிவிட்டேன்.  இந்தியாவின் சார்பில் கங்குலி போட்டியிடுவாரா? இல்லையா? என எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் மீண்டும் ஐ.சி.சி.-க்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். அப்போது எனக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை. ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டேன். தற்போது பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டபடி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக செயல்படப்போகிறேன்.” என்றார்.

மேலும், ஐசிசி பதவிக்கு போட்டியிடுவது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், “ஐ.சி.சி. சேர்மன் தேர்தல் குறித்து முதலில் முறைப்படி அறிவிக்கட்டும். பின்பு எங்களது முடிவை நாங்கள் தெரிவிப்போம். கங்குலி போட்டியிடுவாரா? இல்லை, இந்தியா சார்பில் வேறு யாரேனும் களமிறங்குவார்களா? என்பது குறித்தும் பின்னர் வெளியிடுவோம்.” என்றார்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்? பாகிஸ்தான் தலைவரால் இந்த நிலை - வெளியான அதிர்ச்சி தகவல்! 4

கங்குலி பதவிக்கு வந்தால், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்தும் விலகிட நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டியாளரை இம்மாதம் இறுதிக்குள் பிசிசிஐ வெளியிடும் என தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *