பெங்களூர் அணியின் மோசமான தோல்விகளுக்கு இது தான் காரணம்; விளாசும் முன்னாள் வீரர் !! 1

பெங்களூர் அணியின் மோசமான தோல்விகளுக்கு இது தான் காரணம்; விளாசும் முன்னாள் வீரர்

பெங்களூர் அணியின் தொடர் தோல்விகள் குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அணி குறித்து விராட் கோஹ்லி குறித்தும் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது;

இந்தியா கேப்டனாக பல பல வெற்றிகளை குவித்த போதும் அவரால் RCB அணியின் கேப்டனாக ஒரு போதும் ஜொலிக்க முடியவில்லை, இவர் தலைமை தாங்கிய அனைத்து ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபி அணி மிகப் பரிதாப நிலையில் தோற்றது இதற்கு விராட் கோலியும் முக்கிய பொறுப்பு. இந்திய கேப்டன் ஆகிய விராட் கோலி RCB அணியை 2012 முதல் தற்போது வரை தலைமைதாங்கி கொண்டுள்ளார் ஆனால் இவரால் ஒருமுறைகூட தன் அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை, 2016 இல் ஒரு முறை மட்டும் பைனலுக்கு முன்னேறியது RCB அணி ஆனால் அதிலும் தோல்வியைத் தழுவியது.

பெங்களூர் அணியின் மோசமான தோல்விகளுக்கு இது தான் காரணம்; விளாசும் முன்னாள் வீரர் !! 2

இந்த அடுக்கடுக்கான தோல்விகளுக்கு சிறந்த அணியை தேர்வு செய்யாதது ஒரு முக்கிய காரணமாகும். ஆர்சிபி அணியில் பேட்டிங் வரிசை மிகச் சிறப்பாக இருந்த போதும் பௌலிங் வரிசையில் சஹாலை தவிர்த்து மற்ற யாரும் ஒழுங்காக செயல்படாததால் இந்த அணி சிறப்பாக செயல்படாமலேயே உள்ளது.உலகின் தலைசிறந்த மற்றும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான இந்திய கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார் இன்னும் பல சாதனைகளை முறியடிக்க உள்ளார் இருந்தபோதும் RCB அணிக்காக 110 மேட்சுகள் தலைமை ஏற்று 49 வெற்றி பெற்று 55 தோல்வி அடைந்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் ஒழுங்காக அணியைத் தேர்வு செய்யாததால் ஆகும். RCB அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட சிறப்பாக செயல்படவில்லை, ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை மிக பலம் வாய்ந்ததாக தென்பட்டாலும் பௌலிங் வரிசை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது, கடைசி நேரங்களில் வேகப்பந்து வீச்சு பெரும்பாலும் எடுபடவே இல்லை, பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூறுவதாவது விராட் கோலி சிறந்த அணியை தேர்வு செய்யாவிட்டால் RCB அணி வெற்றி பெறுவது மிக மிகக் கடினமாகும் என்று கூறியுள்ளார்கள்.மீண்டும் மீண்டும் இந்நிலை தொடர்ந்தாள் அது விராட் கோலிக்கு மிகவும் பின்னடைவாகவே அமையும் என்று ஆகாஷ் சோப்ரா தன் YouTube சேனலில் விமர்சித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *