உங்கள புடிசவங்க கோடிபேர் இருக்காங்க, எதுக்கும் கவலைபடாதீங்க; கோலிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 1

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் விராட் கோலி ஏன் உலகக் கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.மேலும் இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.

உங்கள புடிசவங்க கோடிபேர் இருக்காங்க, எதுக்கும் கவலைபடாதீங்க; கோலிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 2

இந்த நிலையில் பலரும் விராட் கோலியின் முடிவு பற்றி பேசி வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் விராட் கோலி டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, அப்பொழுது விராட் கோலி மிகப் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்தார், நான் அப்பொழுது துபாயில் தான் இருந்தேன் எனக்கு அப்பொழுது நன்றாகவே தோன்றியது,’ ஒரு வேளை மட்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் தோல்வியடைந்தால் விராட் கோலி மீது கடுமையான விமர்சனம் எழும் மக்களும்,வீரர்களும் விராட் கோலிக்கு எதிராக இருந்திருப்பார்கள்’. இதனை எல்லாம் அவர் கருத்தில் கொண்டுதான் டி20 தொடர் கேப்டன் வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஒரு நட்சத்திர வீரராக இருந்தாலே பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி விடும், ஆனால் அதனையெல்லாம் நினைத்து பயப்பட தேவையில்லை, விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஆகிய இருவரும் சிறந்தவர்கள், இவர்கள் எதையும் கண்டு அஞ்சத் தேவையில்லை ஒட்டுமொத்த நாடும் அவர்கள் மீது அன்பைப் பொழிகிறது என்று விராட் கோலிக்கு ஆதரவாக சோயிப் அக்தர் பேசியிருந்தார்.

உங்கள புடிசவங்க கோடிபேர் இருக்காங்க, எதுக்கும் கவலைபடாதீங்க; கோலிக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் !! 3

மேலும் பேசிய அவர், விராட் கோலி வருகிற ஐந்து அல்லது ஆறு மாதம் சிறந்த பார்மில் இருந்தால், நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட் தொடரில் 120 தங்கள் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் விராட் கோலியின் திறமை குறித்து பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *