ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீங்க தம்பி; அக்தருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 1

ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீங்க தம்பி; அக்தருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் சிக்கி தவித்து வருகிறது. இதில் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதி திரட்ட நீண்ட நாட்களாக அரசியல் காரணங்களால் நடத்தப்படாமல் உள்ள

இந்தியா – பாகிஸ்தான் தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்திருந்தார்.

ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீங்க தம்பி; அக்தருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 2

இதற்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் பணம் இந்தியாவுக்கு அவசியமில்லை என்றும் பிசிசிஐ ஏற்கனவே ரூ. 51 கோடி அளித்துள்ளது. இன்னும் தேவைப்பட்டால் அதையும் வழங்க தயாராக உள்ளது. தனியாக நிதி திரண்ட வேண்டிய அவசியம் பிசிசிஐக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் தான் சொன்னதை கபில் தேவ் சரியாக புரிந்து கொள்ளவில்லை என அக்தர் மீண்டும் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது நிதி திரட்ட வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளது என்றும். அதற்காக கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீங்க தம்பி; அக்தருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 3

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில்,“என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது கடைசி வாய்ப்பு தான். அதைப்பற்றிய சிந்தனையே இல்லை. நிதி திரட்ட அதற்கு பலவழிகள் உள்ளது. அதற்காக கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை. உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது கிரிக்கெட் என்பது அதற்கு முன்னாள் சிறு விஷயம் தான்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *