தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏன் நான்காவது இடத்தில் களம் இறங்கினேன் என்ற காரணத்தை ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார், இந்திய அணி பரிதாபமான நிலையில் இருக்கும் பொழுது இப்படி பொறுப்பில்லாமல் ரிஷப் பண்ட் விளையாடியது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
மேலும் அதனை தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்து 85ரன்கள் அடித்து அசத்தினார், எப்பொழுதும் 5 அல்லது 6 இடங்களில் பேட்டிங் செய்யும் ரிஷப் ஏன் முன்னதாகவே களமிறக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தனது பேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம் குறித்து இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, ஒரு தனிநபர் சிறப்பாக செயல்பட்டால் எப்பொழுதுமே பாசிட்டிவான விஷயங்கள் பேசப்படும், நாம் எப்படி வேண்டுமென்றாலும் விளையாடலாம் ஆனால் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் எப்பொழுதும் நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும், அனைவருக்கும் நான் எப்பொழுது அமைதியாக மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொறுமையாக விளையாடினேன் என்று ஆச்சரியமாக இருக்கும் ஆனால் நான் இப்படி விளையாடுவதற்கு அதிகமாக டிஸ்கஷன் நடைபெற்றது, போட்டிக்கும் முன் எதை பயிற்சி செய்கிறோமோ அதை போட்டியில் செய்துவிடுவேன் என்று ரிஷப் பண்ட் பேசியிருந்தார்.

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாலாவது பேட்டிங் பொசிஷன் இறங்கியதற்கான காரணம் இந்திய அணி லெஃப்ட் ரைட் காம்பினேஷன் பேட்டிங் மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்று ரிஷப் என்று பேசியிருந்தார்.
மேலும் இந்திய அணிக்கு ஷார்டுள் தாக்கூர் வெங்கடேஸ் ஐயர் போன்ற வீரர்கள் கிடைத்திருப்பது மிகப் பெரும் பொக்கிஷம் என்றும் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தற்பொழுதும் சிறந்த பார்மில் தான் உள்ளார், அவருடைய திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பண்ட் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.