"இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை அடிச்சிக்க ஆளே இல்ல" சேவாக் கருத்து 1

திறமை அடிப்படையில் பார்க்கையில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவை அடித்துக் கொள்ள எவரும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி பெரிதும் பேசப்பட்டு, பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்திக் பாண்டியா. துவக்கத்தில் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் வெளியில் அமர்த்தப்பட்டு வந்திருந்தாலும், தனது திறமையான செயல்பாட்டால் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து முக்கிய வீரராக செயல்பட்டு வருகிறார்.

"இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை அடிச்சிக்க ஆளே இல்ல" சேவாக் கருத்து 2

கபில் தேவுக்கு பின்னர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கான தேடலில் கிடைத்த பதிலாகத்தான் இவரை ஒட்டுமொத்த நாடுமே பார்த்து வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. 15 போட்டிகளில் 402 ரன்கள் குவித்துள்ளார். முக்கியமாக இவரது ஸ்டிரைக் ரேட் 191.42. கொல்கத்தா அணிக்கு எதிராக 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்ததே இவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இறுதியில் மும்பை அணி கோப்பையை தட்டிச் செல்வதற்கு இவரும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

"இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை அடிச்சிக்க ஆளே இல்ல" சேவாக் கருத்து 3

ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய வீரேந்திர சேவாக், “இந்திய அணியில் திறமை அடிப்படையில் பார்க்கையில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போன்று பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றையும் செய்ய தற்போதைய இந்திய அணியில் எவரும் இல்லை. அப்படி ஒருவரை பிசிசிஐ கண்டிருந்தால் பெண்களை குறித்து சர்ச்சையாக பேசிய பிறகு, மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க பிறகு, பல போட்டிகளில் தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் இப்படி இந்திய அணியின் அவரால் காலடி எடுத்து வைத்திருக்க முடியும். இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அவரைப் போன்று சிறந்த வீரர் இல்லை என்று.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை அனைவரும் கண்டிருப்பர். நிச்சயம் உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்” என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *