இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கும்போதே பென் ஸ்டோக்ஸ் தான் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் எனவும் அவரைப் போல் இந்தியாவில் எந்த ஒரு வீரரும் இல்லை எனவும் மறைமுகமாக ஹர்திக் பாண்டியா தாக்கிப் பேசியுள்ளார் கவுதம் கம்பீர்.
இங்கிலாந்து நம்பர் 1 ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஈடு இணையாக உலகில் எந்த வீரரும் இல்லை என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை 2019 ஹீரோவான பென் ஸ்டோக்ஸ் தற்போது மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டாப் ஃபாரில் இருக்கிறார். 2வது டெஸ்ட் போட்டியில் 176 மற்றும் 78 ரன்களை எடுத்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து

இந்தத் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் 313 ரன்களை அடித்த ஸ்டோக்ஸ் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
“பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்தியாவில் இப்போதைக்கு இல்லை. இல்லவே இல்லை, ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமாகத் திகழ்கிறார்.
இந்தியாவில் மட்டுமல்ல, அவர் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஆடுவதைப் பார்க்கும் போது உலகிலேயே எந்த ஒரு வீரரும் அவருக்கு நெருக்கமாக வரவில்லை.
ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரர் எந்த ஒரு கேப்டனின் கனவு வீரர் ஆவார்.மேலும் பென் ஸ்டோக்ஸ் தன்னிலே ஒரு கேப்டன் தான், கேப்டனாக இருந்தால்தான் கேப்டன் என்று அழைக்கப்பட வேண்டியதில்லை, ஒருவரது ஆட்டத்தின் மூலமே கேப்டன் என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்று விடுவார், அதுதான் பென் ஸ்டோக்ஸ்.
எனவே நிறைய வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் போன்று ஆட வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலக கிரிக்கெட்டில் இப்போதைக்கு யாரும் இல்லை. ” என்று ஸ்டார்ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட அவருக்கு இணையான வீரராக ஹர்திக் பாண்டியா இருக்கும் போது அவர் தன் கம்பீரக் இப்படிக் கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது