இதுக்கு மேல என்ன தான் செய்ய முடியும்... சீக்கிரம் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் வேண்டுகோள் !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் திலீப் வெங்சர்க்கார் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியில் தேர்ந்தெடுங்கள் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்காவிற்கு செல்லும் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதுக்கு மேல என்ன தான் செய்ய முடியும்... சீக்கிரம் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் வேண்டுகோள் !! 2

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடி வரும் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் வெறும் 4 போட்டிகளில் பங்கேற்று 435 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இவருடைய இந்த அபாரமான ஆட்டத்தின் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த இளம் வீரரை சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிச்சயம் ருத்ராஜ் கெய்க்வாட்டை எடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

இதுக்கு மேல என்ன தான் செய்ய முடியும்... சீக்கிரம் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் வேண்டுகோள் !! 3

அதில் பேசிய அவர், அபாரமான பார்மில் இருக்கும் ருத்ராஜை இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான சரியான நேரம் வந்துவிட்டது, ஆனால் இந்திய அணி இன்னும் அவரை தேர்வு செய்யவில்லை இன்னும் எத்தனை ரன்கள் அடித்தால் அவரை தேர்வு செய்வீர்கள் என்று இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக திலீப் கேள்வி கேட்டுள்ளார்.

மூன்றாவது இடத்திலும் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை படைத்த ருத்ராஜை இன்னும் ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. அவருக்கு வயது தற்பொழுது 18 அல்லது 19 கிடையாது, அவருக்கு தற்பொழுது 24 வயதாகிறது. அவரை தற்பொழுது இந்திய அணியில் தேர்ந்தெடுக்காமல் இருபத்தி எட்டு வயதாகும் பொழுது தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு பயனும் கிடையாது என்று திலீப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *